Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/"இக்னோ' தேர்வுகள் நாளை துவக்கம்

"இக்னோ' தேர்வுகள் நாளை துவக்கம்

"இக்னோ' தேர்வுகள் நாளை துவக்கம்

"இக்னோ' தேர்வுகள் நாளை துவக்கம்

ADDED : மே 31, 2010 01:33 AM


Google News
Latest Tamil News

மதுரை : இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில்(இக்னோ) பருவத்தேர்வு நாளை துவங்குகிறது.

பல்கலை மண்டல இயக்குனர் சண்முகம் அறிக்கை: பல்வேறு நாடுகளில் 753 மையங்கள், சிறைகளில் 21 மையங்கள் மற்றும் 51 இக்னோ கூட்டமைப்பு மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்த மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 36 பேருக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விவரங்களை இக்னோ இணையதளத்தில் பெறலாம்.

தென் மண்டலத்தில் மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, ஈரோடு உட்பட பத்து மையங்களில், பத்தாயிரம் பேர் தேர்வு எழுதவுள்ளனர். அனுமதி படிவம் கிடைக்காதவர்கள் இணையதளத்தில் இருந்து அச்சு எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு செல்வோர் மண்டல மையத்தின் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

தேர்வு அனுமதி படிவத்தில் ஏதேனும் குறிப்பு இருப்பின் "இக்னோ' மண்டல மையத்தை அணுகலாம். பி.சி.ஏ., - எம்.சி.ஏ., மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு அனுமதி படிவம் மண்டல மையத்தில் இருந்து ஜூன் கடைசி வாரத்தில் அனுப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு இக்னோ மண்டல மையத்தை நேரில் அல்லது போனில் (0452 -238 0387, 238 0733, 237 0733) தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us